சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு குமாரசாமி பேச்சு


சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரு, 

சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்தார்.

பல்வேறு நலத்திட்டங்கள்

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன.

கூடுதலாக ரூ.500 கோடி

சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் மூலம் இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

சிறுபான்மையின மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம். சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது அரசின் விருப்பமாகும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

திட்டங்களின் விவரங்கள்

இந்த விழாவில் சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டை குமாரசாமி வெளியிட்டார்.

விழாவில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கோபால்கவுடா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் ஜமீர்அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ், யு.டி.காதர், லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

Next Story