மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி + "||" + Motorcycle clash on truck near Paramathi Vellore; The boy kills

பரமத்தி வேலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி

பரமத்தி வேலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி
பரமத்தி வேலூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுவன் பலியானான்.
பரமத்திவேலூர்,

பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சவுந்தர்ராஜன் (வயது 23). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்திருந்த பஞ்சபாளையத்தை சேர்ந்த தனது சகோதரியின் மகன் லோகித்தை (5) மீண்டும் பஞ்சபாளையத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளின் முன்னால் லோகித்தை அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.


பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் லோகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சவுந்தர்ராஜன் படுகாயம் அடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி தகவல்
தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
2. மத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை - அக்காள் கணவர் கைது
மத்தூர் அருகே வாலிபரை குத்திக்கொலை செய்த அக்காள் கணவர் கைது செய்யப்பட்டார்.
3. சோமாலியா: அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 22 பேர் பலி
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.
4. லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு
லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு போடப்பட்டுள்ளது.
5. மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது
பேரணாம்பட்டில் மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது டிப்பர் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...