டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து ரெயில் பயணிகளிடம் பணம் பறித்த முதியவர் கைது
டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து ரெயில் பயணிகளிடம் பணம் பறித்து வந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து ரெயில் பயணிகளிடம் பணம் பறித்து வந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
அபராதம் ரசீது
மும்பை தகிசரை சேர்ந்தவர் ஹரேஷ். இவர் சம்பவத்தன்று அந்தேரிக்கு மின்சார ரெயிலில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அவரை பிடித்தார். மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணம் செய்ததாக கூறி, அபராதம் செலுத்தும் படி கூறினார்.
உடனே ஹரேஷ் அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதற்கான ரசீது தராமல் அங்கிருந்து நைசாக நழுவினார்.
போலி டிக்கெட் பரிசோதகர் கைது
இதனால் சந்தேகம் அடைந்த ஹரேஷ், இதுபற்றி அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து, அந்த டிக்கெட் பரிசோதகரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் காந்திவிலியை சேர்ந்த அரவிந்த் மேத்தா (வயது68) என்பதும், டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து பயணிகளிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story