வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வசந்தபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 46). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்படவே மனமுடைந்த முரளிதரன், திராவகத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும் அவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்டு வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த முரளிதரன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story