குமாரபாளையம் கோட்டைமேட்டில் புதிய பாலம் அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கமணி தகவல்
குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் பகுதியில் புதிய பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
குமாரபாளையம்,
குமாரபாளையம் வட்டம் கோட்டைமேடு பைபாஸ் பகுதியில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் செந்தில்குமார்், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். குமாராபாளையம் பகுதியினை பொருத்த வரையில் இந்தியா சிமெண்டு சாலை முதல் பவானி காவிரி ஆற்று பாலம் வரை உள்ள சாலை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.
எனவே விபத்தினை குறைக்கும் வகையில் குமாரபாளையம், கோட்டைமேடு பைபாஸ் ரோடு பகுதியில் 1 இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 15 போலீசார் பணியிடங்கள் கொண்ட புதிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் பகுதியில் புதிய பாலம் அமைத்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில் மத்திய அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்க உத்தரவிட்டு உள்ளது. அப்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு விரைவில் பூமிபூஜையிடப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் தேவி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story