வானவில் : பட்டனை தொட்டால் ஸ்டார்ட் ஆகும் டி.வி.எஸ். எக்ஸ்.எல். 100 ஹெவி டியூட்டி
தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ், இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பிரபல மாடல் டி.வி.எஸ். எக்ஸ்-எல் 100 ஹெவி டியூட்டி வாகனமாகும்.
முதலில் டி.வி.எஸ்.50 என்ற பெயரிலும், டி.வி.எஸ். 50 சேம்ப் என்றும் சந்தைக்கு வந்து பல வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்நிறுவனம் அடுத்து ‘ஹெவி டியூட்டி’ மொபெட்களை அதிக இழுவிசை கொண்டதாக அறிமுகப்படுத்தின.
இது கிக்கர் மாடலாக வெளிவந்தது. இது வர்த்தகப் பிரிவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகும். தற்போது பொத்தானை அழுத்தினால் ஸ்டார்ட் ஆகும் வகையில் செல்ப் ஸ்டார்ட்டுடன் வந்து ள்ளது.
ஐ-டச் ஸ்டார்ட் என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடல், ரூ.37.304 விலையில் கிடைக்கிறது.
இதில் மொபைல் சார்ஜர் வசதியும் உள்ளது. புதிதாக மினரல் பர்பிள் வண்ணத்திலும் இது கிடைக்கிறது.
Related Tags :
Next Story