ஓசூர் தேர்பேட்டை ஏரி தூர் வாரும் பணி அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்


ஓசூர் தேர்பேட்டை ஏரி தூர் வாரும் பணி அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:30 PM GMT (Updated: 19 Dec 2018 5:53 PM GMT)

ஓசூர் தேர்பேட்டை ஏரியை தூர்வாரும் பணியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட தேர்பேட்டை ஏரியில், ஆகாயத்தாமரைகளை அகற்றி, ஏரியை தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஏரியை தூர்வாரும் பணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு ஏரியை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், தாசில்தார் முத்துப்பாண்டி, தனியார் கம்பெனியின் ஓசூர் அதிகாரி ரமேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ரோஜா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story