சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் - நேர்காணல் ரத்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை இன சுழற்சி முறையில் நிரப்ப அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 142 அமைப்பாளர்கள் மற்றும் 572 சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பணியிடங்களுக்கான நேர்காணல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற்றது.
தற்போது இப்பணி நியமனங்கள் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேர்காணல் ஆகியவை பல்வேறு நிர்வாக காரணங்களினால் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இப்பணி நியமனங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story