குப்பை கொட்டுவதில் தகராறு: கட்டிட தொழிலாளியை எரித்துக்கொல்ல முயற்சி - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை எரித்துக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
வானூர் அருகே உள்ள ஆரோவில் இடையன்சாவடி வண்ணாங்குட்டை தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 63), கட்டிட தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் வெங்கடேசன் மகன் ஜோதி (28).
இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள குளக்கரை அருகே கண்ணதாசன் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஜோதி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கண்ணதாசன் மீது ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த கண்ணதாசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜோதி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story