மாவட்ட செய்திகள்

7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தர்ணா + "||" + The dancers of the rural postal service were immediately forced to implement the recommendation of the 7th Pay Commission

7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தர்ணா

7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தர்ணா
7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்தக்கோரி மன்னார்குடியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளையும் 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம், ஓய்வூதியம், ஆள்குறைப்பு, சம்பள குறைப்பு, அலுவலகங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும். 7-வது ஊழியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தர்ணா போராட்டம் நீடித்தது. போராட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மன்னார்குடி கிளை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் செயலாளர் உதயகுமார், பொருளாளர் பண்டரிநாதன் உள்பட 115 கிளை அஞ்சலகங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 3 வயது குழந்தையுடன் பெண் தர்ணா போலீசார் விசாரணை
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 3 வயது குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
4. பெட்டிக்கடைகளில் மது விற்பனை: கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
பெட்டிக்கடைகளில் மதுவிற்பனையை தடுக்கக்கோரி, கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
5. நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.