பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றுவந்த பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேட்டை அடுத்த தாமரைதேனிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி செண்பகம் (வயது 40). இவர் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபானங்களை தொடர்ந்து விற்றுவந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர். இதில் செண்பகம் பல ஆண்டுகளாக சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், செண்பகத்தை கைது செய்தார்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கலெக்டரை கேட்டுக்கொண்டார். இதையடுத்து கலெக்டர் பொன்னையா, செண்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story