நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்திய 2 பெண்கள் உள்பட 15 பேர் கைது
நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்திய 2 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வருவதை தடுக்க வேண்டும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிப்பாளையம், அக்கரைப்பேட்டை, பாரதி மார்க்கெட், நல்லியான்தோட்டம், நல்லத்துக்குடி, கொள்ளிடம், எருக்கூர், ஆச்சாள்புரம், மேலசெங்கமேடு, சிக்கல், பனைமேடு, கோகூர், மேமாத்தூர், கொடியாளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததாக வெளிப்பாளையம் பாரதி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி பாண்டியம்மாள் (வயது34), வடக்கு நல்லியான்தோட்டத்தை சேர்ந்த வீரய்யன் மனைவி சிந்தாமணி (54), ஆச்சாள்புரத்தை சேர்ந்த உதயசூரியன் மகன் ஸ்ரீதர் (25), காளமாநல்லூரை சேர்ந்த சவுந்தரராஜன்(46) உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 760 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story