வேளாளர் என்ற பெயர் பிரச்சினையால் 2 அமைப்பினர் போட்டி ஆர்ப்பாட்டம்


வேளாளர் என்ற பெயர் பிரச்சினையால் 2 அமைப்பினர் போட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாளர் என்ற பெயர் பிரச்சினையால் 2 அமைப்பினர் போட்டி ஆர்ப்பாட்டம் சங்கு ஊதி கோரிக்கையை வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க தமிழகஅரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்தநிலையில் வேளாளர் என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அந்த பெயரை பயன்படுத்த மத்தியஅரசிடம் மாநிலஅரசு பரிந்துரை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வ.உ.சி. மக்கள் கழகம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 2 அமைப்பினர் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story