பாளையங்கோட்டையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம்


பாளையங்கோட்டையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:15 AM IST (Updated: 20 Dec 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற தபால் ஊழியர்கள்

கமலேஷ் சந்திரா பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். குரூப் இன்சூரன்சை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்களின் இடமாற்றத்துக்கான அதிகாரத்தை கோட்ட அதிகாரிக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தபால் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தபால் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது.

தர்ணா போராட்டம்

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இதனால் கிராமப்புறத்தில் தபால் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

துணை தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் அப்துல் சமது முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஞானசிங் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் திரளான கிராமப்புற தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story