நெல்லையில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்


நெல்லையில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:00 AM IST (Updated: 20 Dec 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை, 

நெல்லையில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நெல்லை மாவட்ட கலெக் டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 35 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் முதியோர் உதவித் தொகையாக ரூ.1½ லட்சம், 60 ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட் டன. உலமா நலவாரியம் மூலம் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகை ஒருவருக்கு ரூ.17 ஆயிரமும் மேலும் சிலருக்கு உலமா நியமன உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட சிறுபான்மையின கருத்தாளர் சிப்சன், இஸ்லாமிய மகளிர் சங்க கவுரவ செயலாளர் செய்யது அகமது, தனி தாசில்தார் பிரின்சிலி அருண்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story