சுள்ளிக்காடு பகுதியில் கழிப்பறை கட்ட தம்பதி எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு


சுள்ளிக்காடு பகுதியில் கழிப்பறை கட்ட தம்பதி எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Dec 2018 2:57 AM IST (Updated: 20 Dec 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர்

ஈரோடு,

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

அறச்சலூர் அருகே உள்ள சுள்ளிக்காடு பகுதியில் பொது கழிப்பறை இல்லை. இதனால் நாங்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தோம். அதனால் எங்கள் ஊரில் பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் பொது கழிப்பறை கட்ட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் எங்கள் ஊரை சேர்ந்த ஒரு தம்பதியினர் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் வருகிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story