கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் கூடுதல் நிவாரண நிதி சட்டசபையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவிப்பு


கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் கூடுதல் நிவாரண நிதி சட்டசபையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவித்தார்.

பெலகாவி, 

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவித்தார்.

கர்நாடக சட்டசபையில் வறட்சி குறித்து விவாதம் நேற்று நடைபெற்றது.

100 தாலுகாக்களில் வறட்சி

விவாதத்திற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதில் அளித்து பேசியதாவது:-

“கர்நாடகத்தில் 100 தாலுகாக்கள் வறட்சி பகுதி் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் கால் நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். கால்நடை களுக்கு தீவனம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம்

கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் கோசாலைகள் மற்றும் தீவன வங்கிகள் தொடங்கப்படும்.

விவசாயிகள் மற்றும் வறட்சி விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இந்த பிரச்சினைகளில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்ைல. 2000-ம் ஆண்டு முதல் இதுவரை நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வறட்சி இருக்கிறது.

16 மாவட்டங்கள்

இதில் கர்நாடகத்தில் 16 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. தொடா்ச்சியாக வறட்சி ஏற்பட்டு வருவதற்கு காரணத்தை கண்டறிய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். வறட்சி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த ஆண்டு(2019) மே மாதம் வரை தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தீவனம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்திற்குள் தீவனம் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.

மந்திரிசபை துணை குழு

பருவமழைக்கு முன்பு பெய்யும் மழையில் 48 சதவீதம் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக பயிர் பயிரிடும் பரப்பில் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறைந்தது. மழை குறைவாக பெய்துள்ள தாலுகாக்கள், வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்படும்.

வறட்சி நிலை குறித்து முடிவு எடுக்க மந்திரிசபை துணை குழு அமைக்கப் பட்டுள்ளது. கிராமங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ேளாம்.

மேலும் ரூ.50 லட்சம்

மேலும் மக்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்வதை தடுத்து, உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம். எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலான அமலாக்கப்படைக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி போதவில்ைல என்ற கருத்து நிலவுகிறது. வறட்சி பாதித்துள்ள 100 தாலுகாக்களுக்கு கூடுதலாக தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இந்த நிதியில் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பது, குழாய்களை பதிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

தீவனங்களுக்கு ரூ.10 கோடி

கால்நடைகளின் தீவனங் களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறட்சி நிலையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 கோடி நிதி இருப்பில் உள்ளது. வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. கலெக்டர்கள் கேட்கும்போது, நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை மாவட்ட கலெக்டர்கள், குடிநீர் உள்ளிட்ட வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.142 கோடியை செலவு செய்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.546 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையை கொண்டு பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அவர்களின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்படும்.

நிவாரண பணிகளை...

வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.2,434 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.”

இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Next Story