குதிரை மொழியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தே.மு.தி.க. வலியுறுத்தல்


குதிரை மொழியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தே.மு.தி.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

குதிரை மொழியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தே.மு.தி.க. வலியுறுத்தி உள்ளது.

சாயல்குடி,

சாயல்குடியில் தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அவை தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் திலிப்காந்த், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், சதுக் அப்துல்லா, நாககன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணி, பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017–18–க்கான பயிர் காப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும். மின்வாரியம், போலீஸ் நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மூக்கையூர் குதிரைமொழியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலாடி யூனியனை மூன்றாக பிரித்து கடலாடி, சாயல்குடி, சிக்கல் யூனியன்கள் என அறிவிக்க வேண்டும். வாலிநோக்கத்தில் செயல்படும் தமிழக அரசு உப்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணை பொறுப்பாளர் வடிவேல், ஒன்றிய செயலாளர்கள் கமுதி வேல்மயில் முருகன், திருப்புல்லாணி அப்துல் ஹக்கிம், மண்டபம் கிழக்கு தங்கப்பாண்டி, நகர் செயலாளர்கள் ராமேசுவரம் முத்துகாமாட்சி. ராமநாதபுரம் ராம்கி, கீழக்கரை வந்தே நவாஸ், பேரூர் கழக செயலாளர் கமுதி இந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாயல்குடி பேரூர் கழக செயலாளர் முகமது ரபிக் நன்றி கூறினார்.


Next Story