விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை தொடர்ந்து விமர்சித்து வரும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் முன்னிலை வகித்தார். மாநில தொழிலாளர் முன்னேற்ற அணி செயலாளர் அன்பானந்தம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story