நெய்வேலி, திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெய்வேலி, திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் நெய்வேலி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நெய்வேலி நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் குழந்தைராஜ், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன், மாநில நிர்வாகிகள் குணவழகன், குரு, காசிநாதன், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் மணிவேந்தன், சிறுத்தை சிவா, குமார், பாலாஜி, அய்யப்பன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எச்.ராஜாவை கண்டித்து திட்டக்குடி பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் செம்மல், துணை செயலாளர் குணத்தொகையன், இணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் ஜான்செங்குட்டுவன், நகர இணை செயலாளர் முருகையன், ஒன்றிய துணை செயலாளர் சுந்தரவளவன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், பிரேம்பிரகாஷ், சங்கர், தடாகணேசன், திருசங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மங்களூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேரடி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணை செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். வக்கீல் பாலு, ஒன்றிய பொருளாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் பெரியசாமி வரவேற்றார். மண்டல செயலாளர் திருமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயா.தமிழன்பன் ஆகியோர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் சஞ்சய் காந்தி, சுந்தர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story