உத்தமபாளையம் அருகே ஒரே கிராமத்தில் 40 முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் மீண்டும் வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் மனு


உத்தமபாளையம் அருகே ஒரே கிராமத்தில் 40 முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் மீண்டும் வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 40 முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் உதவித்தொகை வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

உத்தமபாளையம், 

தமிழகத்தில் முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட் கள் மற்றும் மருந்து பொருட் களை பெற்று வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கன்னிசேர்வைபட்டி கிராமத்தில் உதவித்தொகை பெற்று வந்த 40 முதியோர்களுக்கு திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்காததால் முதியோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வங்கி ஊழியரிடம் சென்று கேட்டனர். அப்போது உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி 40 முதியோர்களும் நேற்று உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் சப்-கலெக்டர் வைத்திநாதனை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்கள் உதவித்தொகையை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.

இந்த மனுக்கள் மீது நேரடியாக விசாரணை நடத்தி தகுதியானர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சப்-கலெக்டர் உறுதி கூறினார்.

Next Story