திருமருகல் ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் புகையான் நோயால் பாதிப்பு அதிகாரி ஆய்வு


திருமருகல் ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் புகையான் நோயால் பாதிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் புகையான் நோய் தாக்கிய சம்பா பயிர்களை வேளாண்மை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியத்தில் 13 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயல் மற்றும் கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்தநிலையில் சேதமடைந்த பயிர்களை விவசாயிகள் மருந்து தெளித்து காப்பாற்றி வந்தனர். ஆனால் 15 ஆயிரம் ஏக்கரில் புகையான் நோய் தாக்கி சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

திருமருகல் ஒன்றியத்தில் புகையான் நோய் தாக்கிய சம்பா பயிர்களை சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பொறுப்பு அலுவலர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கீழப்பூதனூர் பகுதியில் உள்ள ஒரு வயலில் இறங்கி பயிரை தாக்கி இருந்த பூச்சிகளை கண்டறிந்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் புகையான் நோயில் இருந்து பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகளை விளக்கி கூறினார். ஆய்வின்போது சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுனர் சந்திரசேகர், மீன்வளத்துறை வல்லுனர் ஹினோபெர்னாண்டோ, தொழில்நுட்ப அலுவலர் ஞானபாரதி, திருமருகல் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன், கங்களாஞ்சேரி உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story