ஐகோர்ட்டுக்கு நாளை முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை
சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை,
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா, பி.ராஜமாணிக்கம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.நிர்மல்குமார், சி.சரவணன், பி.புகழேந்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், வருகிற 27-ந்தேதி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த அவசர வழக்குகளை வருகிற 26-ந்தேதி பகல் 1.30 மணிக்குள் ஐகோர்ட்டு பதிவுத்துறையில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story