பனம் பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து மாடு பலி


பனம் பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து மாடு பலி
x
தினத்தந்தி 21 Dec 2018 5:00 AM IST (Updated: 21 Dec 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே பனம் பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து மாடு ஒன்று பரிதாபமாக இறந்துபோனது.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியை சேர்ந்தவர் பொன்னார்(வயது 52). இவர் மாட்டு வண்டி வைத்துள்ளார். அதற்காக 2 மாடுகளை அவர் வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள வயிற்றுமலை பகுதியில் பொன்னாரின் 2 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றது. அங்குள்ள மலையடிவார தோட்டத்தில் புற்களை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அவற்றில் ஒரு மாடு புற்களிடையே மறைத்து வைத்திருந்த பனம் பழத்தை தின்றது. உடனே அந்த பனம் பழம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது தான் அதில் வெடி வைத்திருந்தது தெரியவந்தது. வெடி வெடித்ததில் மாட்டின் தாடை பகுதி கிழிந்தது.

வெடி வெடித்ததில் பலத்த காயமடைந்த அந்த மாடு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோனது. இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மலையடிவாரத்தில் புற்களிடையே மறைத்து வைத்திருந்த 8 பனம் பழத்தில் வைத்திருந்த வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

பனம் பழத்தில் வெடி மருந்துகளை வைத்தது யார், அவர்கள் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மக்காசோளம், நெற்பயிர்களை வனப்பகுதியில் இருந்து இறங்கும் காட்டு பன்றிகள் சேதபடுத்துவதால் அதை கொல்வதற்காக வைத்தார்களா அல்லது வனவிலங்குகளை வேட்டையாட வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story