நகை செய்து தருவதாக அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.11 லட்சம் மோசடி தந்தை-மகன் மீது வழக்கு
நகை செய்து தருவதாகக்கூறி அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வட்டவிளையை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 45). இவர் கோட்டார் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். சுகுமாரன் நடத்தி வரும் பர்னிச்சர் கடையின் அருகில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி (52). இவருடைய மகன் விக்னேஷ் (24). இவர்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சுகுமாரன் தனது மகள் திருமணத்துக்காக சிறிது, சிறிதாக தங்க நகைககள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஈஸ்வரமூர்த்தி மிகக்குறைந்த செய்கூலி, சேதாரத்தில் நீங்கள் விரும்புகிற மாடலில் தங்க நகைகளை நான் செய்து தருகிறேன் என்றும், அதற்கான ஆர்டரை என்னிடம் கொடுங்கள் என்றும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதை நம்பிய சுகுமாரன் 60 பவுன் நகைகளை செய்ய ஆர்டர் கொடுத்து 3 தவணைகளில் ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை நகைகளை தரும் போது கொடுப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் ஈஸ்வரமூர்த்தி நகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். கடைசியாக நகைகள் அனைத்தும் திருட்டு போய் விட்டது. எனவே நகைகளை தர பல நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளார். அதனால் சுகுமாரன் தான் கொடுத்த ரூ.11 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறிய போது, தற்போது என்னால் பணம் தரமுடியாது என்றும், நானாக திரும்ப கொடுக்கும் போது வாங்கி கொள்ளுங்கள் என ஈஸ்வரமூர்த்தி கூறியதாகவும், அவருடைய மகன் விக்னேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகுமாரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் மனு கொடுத்தார். அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.அதன் பேரில் ஈஸ்வரமூர்த்தி, விக்னேஷ்ஆகியோர் மீது மா வட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக் டர் தாமஸ்லைசா வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

Related Tags :
Next Story