அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஊராட்சி செயலர் பலி


அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஊராட்சி செயலர் பலி
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊராட்சி செயலர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர், 

பொங்கலூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது40). இவர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சியின் செயலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் ராமம்பாளையத்தில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story