கால்நடை வாரச்சந்தைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு கலெக்டர் ஷில்பா அறிவிப்பு
கால்நடை வாரச்சந்தைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
கால்நடை வாரச்சந்தைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கால்நடை சந்தை
நெல்லை மாவட்டத்தில் பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் என்படும் கால்நோய், வாய்நோய் கண்டறியப்பட்டு உள்ளது.
அப்பகுதிகளில் இருந்து கால்நடைகள் நெல்லை மாவட்ட கால்நடை சந்தைகளுக்கு வருவதற்கும், அதன் மூலம் கோமாரி நோய் எனப்படும் கால்நோய், வாய்நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
ஆகவே நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், கடையம், நயினாகரம், மேலப்பாளையம், பாவூர்சத்திரம், பாம்புகோவில் சந்தை, முக்கூடல், ரெட்டியார்பட்டி, திருவேங்கடம் ஆகிய இடங்களில் கூடும் வாரச்சந்தைகள் உள்பட அனைத்து கால்நடை சந்தைகளுக்கும் 21-ந் தேதி வரை (அதாவது நேற்று) தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தடை நீட்டிப்பு
அவ்வாறு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கோமாரி நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கால்நடைகள் ஓரிடத்தில் அதிக அளவில் திரள்வதாலும், வேறு மாவட்ட, மாநில கால்நடைகள் சந்தைகளுக்கு வருவதாலும், நோய் பரவலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story