தெற்கு ரெயில்வே சார்பில் 8 மாதங்களில் 1,268 சிறப்பு ரெயில்கள் இயக்கம் ரூ.77¼ கோடி வருவாய் ஈட்டியது


தெற்கு ரெயில்வே சார்பில் 8 மாதங்களில் 1,268 சிறப்பு ரெயில்கள் இயக்கம் ரூ.77¼ கோடி வருவாய் ஈட்டியது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 8 மாதங்களில் 172 சுவிதா ரெயில்களும், 1,096 சிறப்பு கட்டண ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்கள், நீண்ட விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை, வேளாங்கண்ணி, நாகூர், மேல்மருவத்தூர், மகா புஷ்கரம், கும்பமேளா போன்ற ஆன்மிக விசேஷ காலங்களிலும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் ரெயில்களை இயக்கி இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 8 மாதங்களில் 172 சுவிதா ரெயில்களும், 1,096 சிறப்பு கட்டண ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளன. இதில் சுவிதா ரெயில்களில் 1½ லட்சம் பேரும், சிறப்பு கட்டண ரெயில்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் பேரும் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 11 லட்சத்து 3 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.

மொத்தம் இயக்கப்பட்ட 1,268 சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.77¼ கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் மேற்கண்ட காலகட்டத்தில் இயக்கப்பட்ட 1,230 சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.74.82 கோடி தெற்கு ரெயில்வே வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story