கூடலூர் சிவன் மலையில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் தரிசனம்


கூடலூர் சிவன் மலையில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 9:57 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் சிவன் மலையில் நடந்த பவுர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் நம்பாலக்கோட்டை சிவன் மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மலை கோவிலில் காலை 7 மணிக்கு சிவலிங்கம், நந்தீஷ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு திரளான பக்தர்கள் சிவன்மலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர். பின்னர் மலை உச்சிக்கு நடந்து செல்லும் 350 படிக்கட்டுகளின் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் நலன் மற்றும் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இதையடுத்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கிரிவல பக்தர்கள் செய்து இருந்தனர். இதேபோல் பவுர்ணமி தினத்தையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story