தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது


தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2018 3:00 AM IST (Updated: 23 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் மகாராஜன் (வயது 20) கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. கடந்த சில வாரங்களாக மகாராஜன் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மர்ம நபர்களால் மகாராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின் (23), கிளின்டன்(20) ஆகியோர் சரண் அடைந்தனர். அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான முள்ளக்காட்டை சேர்ந்த தங்க முனியசாமி மகன் தினேஷ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பகுதியை சேர்ந்த ரூபன் (36) மற்றும் கபில், ராபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதும் கிராஸ்வின், கிளின்டன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Next Story