கஜா புயல் பாதிப்புக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை: தமிழகத்தை புறக்கணிக்கும் பிரதமர் மோடி காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிப்பதாகவும், கஜா புயல் பாதிப்புக்கு ஆறுதல் கூட கூறவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டினார்.
தேனி,
தேனி வட்டார காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேனி வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது, ‘பா.ஜ.க.வை மக்கள் தூக்கி எறியத் தயாராகி விட்டனர். தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி வரவில்லை. ஆனால், நடிகையின் திருமணத்துக்கு செல்வதற்கு மட்டும் அவருக்கு நேரம் இருக்கிறது’ என்றார்.
இதைத்தொடர்ந்து சஞ்சய்தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கடந்த 4½ ஆண்டுகளை வீணடித்துவிட்டது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை.
பா.ஜ.க அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், சாதி, மத பிரச்சினைகளை தூண்டிவிடும் செயல்களை செய்து வருகிறது. பசு மாடுகளின் மீது அக்கறை செலுத்துவதாக காட்டிக் கொள்ளும் அவர்கள், மக்களின் பசியை போக்குவதில் அக்கறை காட்டுவதில்லை.
ராஜீவ்காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெற வேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். ராஜீவ்காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெற வேண்டும் என்று கூறுவது தேச மக்களை அவமதிக்கும் செயல்.
தமிழகத்தில் கஜா புயலால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இப்போது வரை மோடி வரவில்லை. பாதிப்புக்கு ஆறுதல் கூட அவர் சொல்லவில்லை. தமிழகத்தை மோடி முற்றிலும் புறக்கணிக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் கூட பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 5 நாட்களுக்கு பிறகு தான் பார்வையிட சென்றுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்திக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டு மீண்டும் பதவியை ஏற்க வருவது தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் கைப்பாவைகளாக செயல்படுகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஆரூண், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரசூல், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சன்னாசி மற்றும் நிர்வாகிகள் ஹக்கீம், அபுதாகீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குபேந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story