மதுக் கடை திறக்க எதிர்ப்பு


மதுக் கடை திறக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 4:15 AM IST (Updated: 23 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாங்காட்டு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் புதிதாக அரசு மதுக்கடை திறக்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று அந்த கடையின் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாங்காடு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

Next Story