பொன்னேரியில் வாகன சோதனை; 287 பேர் மீது வழக்கு


பொன்னேரியில் வாகன சோதனை; 287 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 23 Dec 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதாக 287 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பொன்னேரி, 

பொன்னேரியில் ஹெல்மெட் அணியாமலும், மது குடித்து விட்டும் வாகனங்களை ஓட்டுவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி ஓட்டிய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

287 பேர் மீது வழக்கு

வாகன விதிகளை மீறியதாக மொத்தம் 287 பேர் மீது போக்குவரத்து விதிகளின் படி வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். விபத்துகளில் இருந்து தப்பித்துக்கொள்ள ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

Next Story