விவசாயிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை


விவசாயிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2018 4:45 AM IST (Updated: 23 Dec 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான விவசாயிகள் பிரதமமந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீடு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்புகள்

மேலும் நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும், வரத்து கால்வாய், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

விவசாய செய்திகளை தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய பதில் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சப்-கலெக்டர் ரத்னா, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேல்குமார் மற்றும் திரளான வேளாண்மை அதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story