மாவட்ட செய்திகள்

கீழக்கவட்டான்குறிச்சியில்சமூக ஆர்வலர் கைதை கண்டித்து நூதன போராட்டம் + "||" + In kilakkavattankuricci Social activist condemned the protests by the protests

கீழக்கவட்டான்குறிச்சியில்சமூக ஆர்வலர் கைதை கண்டித்து நூதன போராட்டம்

கீழக்கவட்டான்குறிச்சியில்சமூக ஆர்வலர் கைதை கண்டித்து நூதன போராட்டம்
கீழக்கவட்டான்குறிச்சியில் சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
கீழப்பழுவூர்,

அரியலூரை சேர்ந்த இளவரசன் எனும் சமூகஆர்வலரை நேற்று அரியலூர் போலீசார் கைது செய்தனர். அதனை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கீழக்கவட்டான்குறிச்சி கிராமத்தில் நூதன போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து காகிதத்தில் மனு எழுதி அதில் ரத்தத்தால் கையெழுத்திட்டு கப்பல் செய்து நீரில் விட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இளவரசன் சிமெண்டு ஆலை, ஸ்டெர்லைட் பாதிப்புக்கு எதிராக குரல் கொடுத்தும், துணிப்பையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் ஒரு புத்தகக்கடை நடத்தி வருகிறார். அதில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காலண்டர்களை வைத்திருந்ததற்காக போலீசார் அவரை கைது செய்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இளவரசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், லட்சிய தி.மு.க. மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.