விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி சார்பில் தமிழகத்துக்கு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் மாநில தலைவர் பேட்டி
பெரம்பலூரில் நடந்த விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி சார்பில் தமிழகத்துக்கு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் மாநில தலைவர் பேட்டியளித்தார்.
பெரம்பலூர், டிச.24-
தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து பொன்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கஜா‘ புயல் பாதித்த இடங்களை பார்வையிட மோடி வராததும், தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காததும் கண்டனத்துக்குரியது. தேர்தல் பிரசாரத்துக்காக மட்டுமே பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகத்திற்கு வந்தால், அவரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும், கருப்பு கொடியும் காட்டப்படும். ஏற்கனவே தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவபெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர். இதையடுத்து கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story