2019 விபத்தில்லா ஆண்டாக அமைய வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கிய போலீசார்
2019 விபத்தில்லா ஆண்டாக அமைய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பரிசுகளை வழங்கினர்.
மானாமதுரை,
2019 விபத்தில்லா ஆண்டாக அமைய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பரிசுகளை வழங்கினர்.
மானாமதுரையில் 2019-ம் ஆண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், சாலை விதிகளை காலண்டரில் அச்சிட்டு வழங்கினர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்று வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
பலரும் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மானாமதுரை போக்குவரத்து போலீசார் சார்பில் முற்றிலும் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை, வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், சாலை விதிகள் குறித்து அச்சிட்ட காலண்டர்களை பரிசாகவழங்கினர். மேலும் வாகனங்களை ஓட்டும் விதம், விபத்து ஏற்படக் காரணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கூறுகையில், 2019-ம் ஆண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும். மேலும் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் விபத்துக்கள் ஏற்படாதவாறு வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு, சாலை விதிகள் அச்சிட்ட காலண்டரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story