டெல்லியில், கர்நாடக பவன் கார்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தம் முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவு
டெல்லியில், கர்நாடக பவனில் உள்ள கார்களை எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளதையொட்டி அந்த கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
டெல்லியில், கர்நாடக பவனில் உள்ள கார்களை எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளதையொட்டி அந்த கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக பவனில் 20 கார்கள்
டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் 20 கார்கள் உள்ளன. டெல்லி செல்லும் கர்நாடக மந்திரிகள், அங்குள்ள கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் இந்த கார்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
கர்நாடக எம்.பி.க்கள் இந்த கார்களில் இலவசமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து அங்குள்ள அவர்களின் வீடுகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சென்று வரலாம்.
கர்நாடக மந்திரிகள், அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றால் அவர்களும் அந்த கார்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் இந்த கார்களை பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது.
குமாரசாமி உத்தரவு
இந்த நிலையில், கர்நாடக பவனில் உள்ள கார்களை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் தங்களின் சொந்த விஷயத்துக்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து டெல்லி கர்நாடக பவனில் உள்ள 20 கார்களிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story