மெக்கானிக் கொலையில் 6 பேர் கைது


மெக்கானிக் கொலையில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2018 3:37 AM IST (Updated: 24 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மெக்கானிக் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்த தொழிலாளி செங்கேணி மகன் குமரேசன் என்ற அய்யப்பன் (வயது 26). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்தார். கடந்த 21-ந்தேதி லெனின் வீதி மணிமேகலை பள்ளி அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட் டார்.

இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த ரவுடி விக்கி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அய்யப்பனை கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட அய்யப்பன் கோட்டக்குப்பம் காவல்நிலைய பகுதியில் நடந்த வீரமணி என்பவர் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளார். வீரமணியின் நண்பர் ரவுடி விக்கி ஆவார். நண்பரின் கொலைக்கு பழிவாங்கும் வகையிலும் தனது தங்கையை காதலித்தது பிடிக்காமலும் விக்கி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அய்யப்பனை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை நிறை வேற்றுவதற்காக அய்யப்பனை தனது கூட்டாளிகளுடன் கடந்த 15 நாட்களாகி விக்கி கண்காணித்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் கடந்த 21-ந்தேதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் இன்ஸ் பெக்டர் தனசெல்வம் தலைமையில் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (26), சூரியகாந்தி நகர் ஆனந்த் என்ற விஜய் (31), கோவிந்தசாலை ஜெயக்குமார் (24), ஜீவானந்தபுரம் அருண் (26), ஜெயப்பிரகாஷ் (27), மேகவர்மன் (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ரத்தம் தோய்ந்த உடைகள், கத்திகள், செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கொலை யாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பாராட்டினார்.

Next Story