பசுக்கள் பற்றி சர்ச்சை கருத்து: நடிகர் நசுருதீன் ஷாவுக்கு சிவசேனா எதிர்ப்பு


பசுக்கள் பற்றி சர்ச்சை கருத்து: நடிகர் நசுருதீன் ஷாவுக்கு சிவசேனா எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

பசுக்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய நடிகர் நசுருதீன் ஷாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது

மும்பை,

பசுக்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய நடிகர் நசுருதீன் ஷாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது

சர்ச்சை கருத்து

பிரபல இந்தி நடிகர் நசுருதீன் ஷா. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்ட செயலை விமர்சித்தார்.

உத்தரபிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரியும் ஒரு இளைஞரும் இறந்தது குறித்து கருத்து தெரிவிக்கையில், “போலீஸ் அதிகாரியின் கொலையை விட பசுக்கள் இறந்ததை முக்கியமாக பேசுகிறார்கள்” என்றார். இதற்கு அங்குள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் இலக்கிய விழாவை தொடங்கி வைக்க இருந்த நசுருதீன் ஷாவுக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன. இதனால் விழாவுக்கு வரவேண்டாம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அவரை தடுத்து விட்டனர்.

சிவசேனா கண்டனம்

நசுருதீன் ஷா நடவடிக்கைகளை சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் மன்ஷா கயண்டே கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நசுருதீன் ஷா சிறந்த நடிகர். ஒரு படத்தில் அவர் பாகிஸ்தான் ஏஜென்டாக நடித்து இருந்தார். இப்போது அந்த கதாபாத்திரமாகவே மாறி வருகிறார். நசுருதீன் ஷாவை போலவே நடிகர் அமீர்கானும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழலாம்” என்றார்.

நவநிர்மாண் சேனா அமைப்பு நசுருதீன் ஷாவுக்கு பாகிஸ்தான் செல்ல விமான டிக்கெட் எடுத்து அனுப்பி உள்ளது.

Next Story