மாவட்ட செய்திகள்

நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலையில் மரக்கிளைகளை போட்டு கிராமமக்கள் மறியல் - 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு + "||" + To grant relief supplies the village sticks on the road - 1 hour traffic impact

நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலையில் மரக்கிளைகளை போட்டு கிராமமக்கள் மறியல் - 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலையில் மரக்கிளைகளை போட்டு கிராமமக்கள் மறியல் - 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலையில் மரக்கிளைகளை போட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலையில் மரக்கிளைகளை போட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூர், குடிதாங்கிச்சேரி, வெள்ளக்குடி ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை அரசு சார்பில் புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிதாங்கிச்சேரி என்ற இடத்தில் சாலையில் மரக்கிளைகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், கூத்தாநல்லூர் வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக ஒரு பகுதியில் வழங்கப்படுவதாகவும், அடுத்த கட்டமாக குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மன்னார்குடி-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
2. ஜம்மு: சாலையில் புதைத்து வைத்த கண்ணிவெடி - தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஜம்முவில், சாலையில் புதைத்து வைத்த கண்ணிவெடியினை தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
3. குலசேகரத்தில் தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
குலசேகரத்தில் தரமற்ற சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.