விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: உளுந்து, துவரை விலை மேலும் சரிவு - நல்லெண்ணெய் விலை உயர்வு


விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: உளுந்து, துவரை விலை மேலும் சரிவு - நல்லெண்ணெய் விலை உயர்வு
x
தினத்தந்தி 24 Dec 2018 3:45 AM IST (Updated: 24 Dec 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து, துவரை விலை சரிந்துள்ள நிலையில் நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. 100 கிலோ மூடைக்கு ஏற்கனவே ரூ.600 வரை குறைந்து இருந்த நிலையில் தற்போது ரூ.300 குறைந்து ரூ.4,000 முதல் ரூ.4,700 வரை விற்பனையானது. உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.6,000 முதல் ரூ.7,400 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.4,900 முதல் 5,700 வரையிலும் விற்பனை ஆனது. துவரை 100 கிலோ மூடைக்கு ரூ.700 வரை விலை குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.300 விலை குறைந்து ரூ.3,700 முதல் ரூ.4,200 வரையிலும், துவரம் பருப்பு ரூ.5,600 முதல் ரூ.6,000 வரையும் விற்பனை ஆனது. பாசிப்பயறு 100 கிலோ மூடைக்கு ரூ.5,800 முதல் ரூ.7,000 வரையிலும், பாசி பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.7,900 முதல் ரூ.8,800 வரையிலும் விற்பனை ஆனது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.2,900 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆனது. மல்லி நாடு ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆனது. வத்தல் குவிண்டாலுக்கு புது வத்தல் ரூ.6,500 முதல் ரூ.7,500 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலும், முண்டு வத்தல் புதியது குவிண்டாலுக்கு ரூ.10,000 வரையிலும் விலை சொல்லப்பட்டது.

விருதுநகர் எண்ணெய் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.2,050 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.1,605 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.1,450 ஆகவும் விற்பனை ஆனது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ மூடைக்கு ரூ.5,400 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடைக்கு ரூ.3,300 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1,800 ஆகவும் விற்பனை ஆனது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.990 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.5,150 ஆகவும் விற்பனை ஆனது.

விருதுநகர் சீனி மார்க்கெட்டில் சீனி குவிண்டாலுக்கு ரூ.60 விலை குறைந்து ரூ.3,380-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.300 விலை உயர்ந்து ரூ.5,300 ஆகவும், பொரி கடலை 55 கிலோவுக்கு ரூ.4,260 ஆகவும், பட்டாணி 100 கிலோவுக்கு ரூ.5,050 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.5,300 முதல் ரூ.8,200 வரையிலும், மசூர் பருப்பு ரூ.5,700 ஆகவும், ரவை 25 கிலோவுக்கு ரூ.1,025 ஆகவும், மைதா முதல் ரகம் 90 கிலோ ரூ.3,430 ஆகவும், 2-வது ரகம் ரூ.2,590 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டா 50 கிலோ ரூ.1,130 ஆகவும் விற்பனை ஆனது. கோதுமை தவிடு 35 கிலோ ரூ.725 ஆகவும் விற்பனை ஆனது.

விருதுநகர் காபி மார்க்கெட்டில் காபி பிளாண்டேசன் பிபி ரகம் 50 கிலோ ரூ.11,000 ஆகவும், ஏ ரகம் ரூ.11,750 ஆகவும், சி ரகம் ரூ.9,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.8,000 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.6,750 ஆகவும் விற்பனையானது.

Next Story