தேவதானப்பட்டி அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
தேவதானப்பட்டி அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவருடைய மனைவி சிவனேஷ்வரி (வயது 19). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலகிருஷ்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இதையொட்டி அவர் தனது மனைவி சிவனேஷ்வரியை அவருடைய தாயார் வீட்டில் விட்டு விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றார்.
இந்தநிலையில் சிவனேஷ்வரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவனேஷ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சிவனேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவனேஷ்வரிக்கு திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரித்தாவும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story