கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 25 Dec 2018 4:00 AM IST (Updated: 24 Dec 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் நேற்று முற்றுகையிட்டனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர செயலாளர் பால்ராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் லவராஜா, பொறியாளர் அணி ராம்குமார், சரவணன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்களை குருத்துப்பூச்சிகள் தாக்கியதால் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். கடந்த 2016-2017-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனைத்து வங்கிகளில் இருந்து பெற்ற பயிர் கடன், நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

பின்னர் குருத்துப்பூச்சி தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களை எடுத்து வந்து, விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story