ஊஞ்சலூர் அருகே மூழ்கி வாலிபர் சாவுகீழ்பவானி வாய்க்காலில்
ஊஞ்சலூர் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
ஊஞ்சலூர்,
மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறை சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மகன் அரிகண்டன் (வயது 24). டிரைவர். நேற்று முன்தினம், அரிகண்டனும், அவருடைய நண்பரான ஊஞ்சலூரை அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவரும் வெள்ளோட்டம்பரப்பு வேலாம்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
பின்னர் இளம்பரிதி மட்டும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு உணவு வாங்கச்சென்றுவிட்டார். அரிகண்டன் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் வாய்க்காலில் மூழ்கினார். ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீண்டும் இளம்பரிதி அங்கு வந்தார்.
அப்போது அரிகண்டனை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அரிகண்டனை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அரிகண்டன் வாய்க்காலில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள பாலத்தின் அடியில் அவருடைய உடல் நேற்று மிதந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாய்க்காலில் மூழ்கி இறந்த அரிகண்டனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story