சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் தற்கொலை கடலூரில் பணியாற்றியவர்


சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் தற்கொலை கடலூரில் பணியாற்றியவர்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டை மாரி நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 49). இவர் கடலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளராக(என்ஜினீயர்) பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சேலத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பழனிசாமி பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story