கனிம வள ஆய்வுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
கொட்டாம்பட்டி பகுதியில் கனிமவள ஆய்வுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி, மேலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மத்திய புவியியல் துறை அதிகாரிகள் மலைபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மேலும் தொடர்ந்து புவியியல் துறை அதிகாரிகள் கொட்டாம்பட்டி பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கனிமவள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் வஞ்சிநகரம் பகுதிகளில் உள்ள குவாரியில் ஆய்வு செய்தனர். அப்போது எதற்காக ஆய்வு என கிராம மக்கள் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் அதிகாரிகள் சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று கம்பூர் பகுதியில் சாலையோரம் இருந்த பாறைகளை காரில் வந்த மத்திய கனிமவளத்தை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கம்பூர்கிராம இளைஞர்கள்,கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆய்வு செய்யவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து வந்து கிராமத்தினரை சமரம் செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story