காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் தி.மு.க.வுக்கு இழப்பு ஏற்படும் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் தி.மு.க.வுக்கு இழப்பு ஏற்படும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை,
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மத்திய பாரதீய ஜனதா ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காங்கிரசின் எமர்ஜென்சி ஆட்சி காலத்தில் தி.மு.க.வின் சிட்டி பாபு, ஆற்காடு வீராசாமி போன்றவர்களின் செவிப்பறைகள் கிழிந்ததை மு.க.ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்.
காங்கிரசுடன் ஏற்பட்ட தி.மு.க. கூட்டணி சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். எனவே கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை ஸ்டாலின் முன்வைக்கிறார். கூடாநட்பு கேடாகும் விளைவை நாளை அவர்கள் அனுபவிப்பார்கள். மிகப் பெரிய இழப்பு தி.மு.க.விற்கு ஏற்படும்.
தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தபோது கொள்ளை அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 10 ஆண்டுகளில் கொள்ளையடித்தனர். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து இதுவரை முடிவு செய்யப்பட வில்லை. உயர்மின் கோபுர விவகாரம் குறித்து மத்திய மந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க. 2 கட்சிகளும் நடிகர் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story