மந்திரி பதவியை பறித்ததால் அதிருப்தி : எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா - ரமேஷ் ஜார்கிகோளி அறிவிப்பு
மந்திரி பதவியை பறித்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ் ஜார்கிகோளி அறிவித்துள்ளார். இது கர்நாடக அரசியலில் ‘திடீர்’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியின் மந்திரி சபை கடந்த 22-ந்தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இதில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகிய 2 பேரும் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் காங்கிரசை சேர்ந்த 8 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். புதியதாக பொறுப்பு ஏற்ற மந்திரிகளுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
இதற்கிடையே மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, காங்கிரசை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் ஆதரவாளர் ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு வெளியானது.
அதில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறி இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் நேற்று (நேற்று முன்தினம்) என்ன சொன்னேனோ அந்த கருத்தில் உறுதியாக உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக செல்போனில் உரையாடியது உண்மையே. எனக்கு 4 நாட்கள் அவகாசம் தாருங்கள்.
நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதை மக்களிடம் கூறுவேன். என்னை பற்றி வெளியான பொய்யான தகவல்கள் குறித்து பல்வேறு விஷயங்களை நான் சொல்ல வேண்டியுள்ளது. யார் கதாநாயகன், யார் வில்லன் என்பதை சொல்வேன். இதற்கு காலஅவகாசம் தாருங்கள்.
காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க மாட்டேன். என்னை பற்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் வருகின்றன. எனக்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை நான் இப்போது சொல்லமாட்டேன்.
நான் மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து, ஊடகங்களில் மந்திரி பதவியில் நீடிக்க ஆர்வம் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆம், நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை எத்தனை முறை தான் உங்களிடம்(ஊடங்கள்) சொல்வது.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
ரமேஷ் ஜார்கிகோளியின் இந்த அறிவிப்பு கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலையில் கூட்டணி ஆட்சிக்கு 2 சுயேச்சைகளை சேர்த்து காங்கிரசுக்கு 82 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 38 பேர் என மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், கூட்டணி ஆட்சிக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும். அதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது.
ஒருவேளை ரமேஷ் ஜார்கிகோளி வழியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story