கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
ஏசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, கந்திகுப்பம், எலத்தகிரி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.
கிருஷ்ணகிரி ஆர்.சி. பாத்திமா தூய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதே போல் சி.எஸ்.ஐ., ஐ.இ.எல்.சி., உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆலயங்களுக்கு சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவை வழிபட்டனர்.
அதை தொடர்ந்து கேக் கொடுத்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இந்த விழாவில் ஏராளமான சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்து வந்தனர்.
இதே போல் சுண்டம்பட்டி, கந்திகுப்பம், எலத்தகிரி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெரும்பாலான கிறிஸ்தவர்களின் வீடுகளில் நட்சத்திர விளக்கும், குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story